Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வித்துறை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று ஆன்ைலன் மூலம் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 15 நாட்களாக கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் மாநில அளவில் ஆன்லைன் மூலம் இன்று நடக்கிறது.  

இன்றைய கவுன்சலிங்கில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கும் இன்று தொடங்குகிறது. முன்னதாக பணி நிரவல் என்ற பெயரில் முக்கியமான இடங்களை அதிகாரிகள் நிரப்பிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடக்க கல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவலில் பெரும் குளறுபடியோடு நடந்துள்ளதால், பணி நிரவலின் போது  வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய  வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங்கை தொடக்க கல்வி–்த்துறை நடத்த உள்ளது. 


இதற்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கான பட்டியலை தொடக்க கல்வித்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதேநேரம், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பட்டியலை வெளியிடவில்லை. முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

Post a Comment

2 Comments

  1. இன்று BRT ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை SGT ஆசிரியர்களுக்கு நடைபெறும்.

    ReplyDelete
    Replies
    1. Its BT; not BRT. sorry for mistyping

      Delete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement