Ad Code

Responsive Advertisement

ஆபத்து காலத்தில் உதவும் பெண்களுக்கான 'ஆப்' அறிமுகம்

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மொபைல் போன், 'ஆப்' தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 



தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் நேற்று, 'மனித சமுதாயத்துக்கு

பயன்படும் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்' என்ற பெயரில், சர்வதேச மாநாடு நடந்தது; இதில், 2012ல், டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஉயிரிழந்த, மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இம்மாநாட்டில், 'ஐ பீல் சேப்' எனப்பெயரிடப்பட்ட, செயலி எனப்படும், மொபைல் போன், 'ஆப்' அறி முகம் செய்யப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த, 'ஆப்' தயாரிக்கப் பட்டுள்ளது. 

இதில் உள்ள சிறப்பு பட்டனை ஐந்து முறை அழுத்தினால், உடனடியாக, தேசிய அவசர கால எண், 100க்கு அழைப்பு செல்லும். பாதிப்புக்கு ஆளாகும் பெண் இருக்கும் இடம் பற்றிய தகவல், 30 விநாடிகளுக்குள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை

எடுக்கப்படும்.வன்முறையால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு சட்டரீதியிலான உதவிகளை அளிக்கும் வகையில், நிர்பயா ஜோதி அறக் கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக் கட்டளையும், இந்திய மொபைல் போன் தரக் கூட்டமைப்பும் சேர்ந்து, 'ஐ பீல் சேப்' மொபைல், 'ஆப்'பைஉருவாக்கி உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement