ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.
அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை