Ad Code

Responsive Advertisement

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைக்க ஊக்கவிக்க வேண்டும் என மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் (எம்டிஏ) தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.


"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதன் முதல் நாளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கற்றல் திறனில் குறைபாடுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகர் பேசுகையில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் வாசித்தல், எழுதுதல், கணிதம் போன்றவற்றில் பின்தங்கி இருந்தாலும் பிற துறைகளில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்கள்.

இந்தக் குழந்தைகளால் ஓவியம், இசை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைக்க இயலும். அதற்காக அவர்களை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பது அவசியம். கூட்டு செயல்பாடுகளிலும் உளவியல் திறனிலும் இந்தக் குழந்தைகள் அபார ஆற்றலை வெளிப்படுத்துவர் என்றார் அவர்.

முன்னதாக நிகழ்ச்சியை தென் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆஷா மெரீனா தொடக்கி வைத்தார். எம்டிஏ ஒருங்கிணைப்பாளர் வான்கடே ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement