Ad Code

Responsive Advertisement

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து

இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

மதுரையில் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் இயக்கம்) மாநில கல்விக்குழு சார்பில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை மேம்பாட்டை நோக்கி எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி (ஆண்டிப்பட்டி) பேராசிரியர் ஏ.கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்துப் பேசியது: தரமிக்க கல்வி, தேசப்பற்று, தேச முன்னேற்றம், அனைவருக்கும் சமமான கல்வி என பல சிறப்பு அம்சங்களுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறைக்கு கல்வியுடன், தர்மங்களையும், மனிதநேயத்தையும் கற்பிப்பது அவசியம். ஆகவே புதிய கல்வியானது நேயத்தையும், அன்பையும் இளந்தலைமுறையினரிடையே ற்படுத்தும் என்றார்.

கலந்துரையாடலை தொடங்கிவைத்து திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் பி.ராமமூர்த்தி பேசியது: தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு தேச பக்தியை ஏற்படுத்துவது அவசியம். அறிவும், ஆற்றலும், அன்பும் சேர்ந்த கல்வியே இன்றைய காலகட்டத்துக்குத் தேவையானது.

சுவாமி விவேகானந்தர் விரும்பிய பாரதத்தை நாம் காணவேண்டும் எனில் இளைஞர்களின் சக்தியை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

நாலந்தா போன்ற பழம் பெருமை மிக்க பல்கலைக்கழகம் இருந்த நமது தேசத்தின் பெருமையை இளைஞர்கள் உணரும் வகையில் புதிய கல்வி அமையும் என்றார்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன்: கல்வி கற்கும் குழந்தைகள் இடை நிற்றலை புதிய கல்விக் கொள்கையால் தடுக்கலாம். பெண் கல்வியை உறுதிப்படுத்தும். அறிவுப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்கும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமையும்.

கலந்துரையாடலில் சமூக ஆர்வலர் சந்திரன், விவேகானந்தர் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜெயபால், தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் நிர்வாகி டி.செந்தமிழ்அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement