Ad Code

Responsive Advertisement

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொடக்கம்.

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம், சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது."மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா' சங்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 14 முதல் 20-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒரு வார காலத்துக்கு உபயோகமற்ற பொருள்களில் இருந்து கலைப்பொருள்களை உருவாக்குதல், நெருப்பில்லாத சமையல், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.சென்னையிலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் இந்தப் போட்டிகளில்பங்கேற்க உள்ளனர். கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement