Ad Code

Responsive Advertisement

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசினார்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள குழந்தை நேய பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கான அறிமுகக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


குழந்தை நேய பள்ளிக்கான கூட்டமைப்பின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்றார். குழந்தை நேய பள்ளிகளுக்கான தேவை குறித்து, கூட்டமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சு.மூர்த்தி, சமூக கல்வி நிறுவன இயக்குநர் சியாம் சுந்தர் ஆகியோர் பேசினர்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு மற்றும் சமூக கல்வி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் நடப்பாண்டில் குழந்தை நேய பள்ளிகளை உருவாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளன.

குழந்தைகளின் உரிமைகளையும், அவர்களது ஜனநாயகத்தையும் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்களாகவும், வாழ்வின் வழிகாட்டிகளாகவும் இருக்க முடியும். பள்ளியில் உள்ள

மொத்த ஆசிரியர்களையும் குழந்தை நேயர்களாக மாற்றும் முயற்சியின் தொடக்க கட்டம் இது.

அதே போல் குழந்தைகளுக்குத் தேவையான பல்துறைகளையும் அவர்களுக்கு அளிக்க உள்ளோம் என்றார். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமாட்சி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement