'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது,' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 முதல் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. 
பல லட்சம் மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் வந்தன . பல பள்ளிகளில் மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில் லேப்டாப்கள் வாங்கப்பட்டு வெளிசந்தையில் விற்கப் பட்டுள்ளன. சில பள்ளிகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு லேப்டாப்கள் திருடப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் ஆதார் எண் இருந்தால் மட்டுமே லேப்டாப் வழங்க வேண்டும், மாணவர்களின் கையெழுத்து அவசியம் என கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு பள்ளிக்கு எத்தனை லேப்டாப்கள் தேவை என்பதை பள்ளி தலைமையாசிரியர் தான் அரசு தெரிவிக்க வேண்டும். அதன்பின் எல்காட் மூலம் நேரடியாக பள்ளிக்கு அனுப்பும். கூடுதலாக உள்ள லேப்டாப்கள் கலெக்டருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
நான்கு நாட்கள் : 2016 -- 17 ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி தலைமையில் 8 மாவட்டங்களாக பிரித்து, ஜூலை 19, 20,21,22 என நான்கு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை