Ad Code

Responsive Advertisement

தேசிய சட்ட பள்ளியில் நேரடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு, நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு தேசியசட்டப் பள்ளியில், பி.ஏ., மற்றும் பி.காம்., ஆகியவற்றுடன்,எல்.எல்.பி., படிப்பு, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பாக கற்று தரப்படுகிறது. 

இதில் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய பொது சட்ட மாணவர் சேர்க்கை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால், தற்போது விண்ணப்பிக்கலாம்.தேசிய சட்டப் பள்ளியின், www.tnnis.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி தேசிய சட்டப்பள்ளிக்கு, வரும், 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement