Ad Code

Responsive Advertisement

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது. என் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங்குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது. இந்தச் சட்டப்படி பெற்றோர்களை பராமரிப்பது மகன், மகள்களின் கடமையாகும். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் மகன், மகளிடம் இருந்து நிதி உதவி பெறுவது அவர்களின் உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை அதிகாரிகள் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி வழங்க மறுக்கக்கூடாது. 


பணிப்பதிவேட்டில் வாரிசுதாரர் பட்டியலில் பெயர் இல்லா விட்டாலும் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் இறுதி பணப்பலன்களில் அவரது தாயாருக்கும் பங்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம்கருதுகிறது. எனவே மனுதாரரின் மருமகளுக்கு பணப்பலன்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக கணக்காயர் ஜெனரல், ராமநாதபுரம் ஆட்சியர், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஜூலை 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

1 Comments

  1. Super judgement sir... Aged peoples and our parents are our Living Gods, they must be take care of by their suns and daughters at any cost, some parents might show partiality in some situation of our life to you in many aspects but that is not a major cause, in our childhood days we depended therein for everything they did or tried to do their level best for our wellness, we expected westering from them only they enjoyed their surrendering for us even though they were not economically well of. We respected then, heard them, until we start to earn money . therefore we thought we don't need their help so e started to under value them, we refused to hear their good advice, if we married in many situation we stood in the favour of our wife, here is the main and make problem begin, if the wife/husband considered their in law's as like they're parents there will be no problem at all, but present situation is not like that, because many girls are learned but they risky forget to accept the agreed in law's with them so they do two to three things for their selfishness
    1) the man or girl want to go individually after marriage
    2) the man or girl will enrol their in law's at homages to live happy life
    3) if there are more than 2-3 son's the parents situation will become highly pathetic because all of them quarrel among themselves to take care of their parents, finally no one will give them anything,
    why they have born and brought up you , why they given you for education? Why they saw their happiness from you? Why they thought you as their world? How can you change your mind against your parents? Why do you change your mentality after your marriage?
    No one in this world can be happy if they neglect they're parents, they are our Living Gods,, frankly speaking,
    Marumagangal-will not cause any harness to their in law's (rarely happen) but MARUMAGALGAL 90℅ Cause problems to their In law's, many don't know why but if they treat and think then also like their parents there will be no homages and problems,,, any how parents must be take care of by sons or rarely by daughters... If not we are not human beings.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement