சென்னை;'தேர்வில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக காப்பியடித்தது குறித்து, ஆய்வு நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதில், கல்லுாரிக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக் கோரி, செல்வி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள், ஒட்டு மொத்தமாக காப்பியடித்தது குறித்து விசாரிப்பதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்கலை, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து, குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை