Ad Code

Responsive Advertisement

பெண்கள் பள்ளியில் ராகிங்: மாணவி தற்கொலை முயற்சி: மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை

கரூரில் தனியார் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 மாணவியை மற்ற மாணவிகள் ராகிங் செய்ததால் அம்மாணவி புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் மண்மங்கலத்தில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரஸ்வதி வித்யாமந்திர் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நிகழாண்டு பிளஸ்-1 வகுப்பில் கரூர் காகிதபுரத்தைச் சேர்ந்த டிஎன்பிஎல் தொழிலாளி பட்டாபியின் மகள் ஜனனி (16) சேர்ந்தார். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று பள்ளியில் சேர்ந்தாராம்.
இதை சக மாணவிகள் அவ்வப்போது கேலி, கிண்டல் செய்வராம். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு சக மாணவிகள் 5 பேர் ஜனனியை கேலி, கிண்டல் செய்தனராம். இதையடுத்து தனது தந்தையை அங்கு வரவழைத்த ஜனனி, மறுநாள் வீட்டிற்குச் சென்று, நாப்தலினை உட்கொண்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு. ராமசாமியிடம் பட்டாபி செவ்வாய்க்கிழமை புகார் அளிக்க, அவர் திண்டுக்கல்லில் உள்ள மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளருக்கு புகார் குறித்து விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து புதன்கிழமை பள்ளிக்குச் சென்று 5 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார் திண்டுக்கல் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் எஸ். மேரி.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement