Ad Code

Responsive Advertisement

எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி

தமிமத்திய அரசின் எஸ்சி-எஸ்டி  வேலைவாய்ப்பு  பயிற்சி மற்றும் வழிகாட்டி துறையின் சென்னை  துணை மண்டல வேலைவாய்ப்பு  அலுவலர் எஸ்.கே.சாகோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அதிகமுள்ள  ‘ஓ லெவல்’ கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி  எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக அளிக்கப்படும். இந்த பயிற்சி  
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு நடைபெறும். 


இந்த பயிற்சிப்பெற  +2வில் அறிவியல் பாடங்களை படித்தவர்கள்,  ஐடிஐ பயிற்சியில்  எலக்ட்ரிக்கல்,  எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் +2வில் அறிவியல் பாடங்களை படிக்காதவர்களுக்கு  ஜூலை 30ம் தேதி தகுதி தேர்வு ஒன்றை நடத்தி தேர்வு செய்யப்படுவர்.


விருப்பமுள்ள  எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகள்  ஜூலை 11ம் தேதி  முதல் ஜூலை 28ம் தேதிக்குள்  நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். காலை 11 மணி  முதல் மாலை 5 மணி வரை அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன்   கல்வி தகுதி சான்றிதழ்,  மதிப்பெண் பட்டியல், வேலைவாய்ப்பு அட்டை பதிவு  சான்று, சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பதுடன்  இணைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 29ம்தேதி நேர்முகத்  தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும்  விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும்  எஸ்சி-எஸ்டி வேலைவாய்ப்பு பயிற்சி  மற்றும் வழிகாட்டி மையம், 3வது மாடி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய  கட்டிடம், எண்:56 சந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -600004 என்ற முகவரியில்  நேரில் அணுக வேண்டும். முகவரி, பயிற்சி குறித்து 044-24615112 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement