Ad Code

Responsive Advertisement

பி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை - எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரம் இடம் காலி : மெக்கானிகலுக்கு 'மவுசு'

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரத்து 863 இடங்கள் காலியாக உள்ளன. பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் கடந்த 29-ம் தேதி தொடங்கி, நேற்று முடிந்தது. மொத்தம் 16,143 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ததில், சிவில் பிரிவுக்கு 3,425, மெக்கானிகல் 5,914, எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,182, கெமிக்கல் - 140, டெக்ஸ்டைல் -79, லெதர் - 8, பிரிண்டிங் - 12, பி.எஸ்.சி., -13, உதிரி 12 என மொத்தம் 14,785 பேர் விண்ணப்பித்தனர். 


சிவில் பிரிவில் 2948 பேருக்கு சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 532 பேர் ஆப்சென்ட். மெக்கானிகல் பிரிவில் 5,067 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 921 பேர் ஆப்சென்ட். எலக்ட்ரிகல் பிரிவில் 4,463 பேரும், பி.எஸ்.சி., முடித்த 10 பேரும், கெமிக்கல் பிரிவில்129 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 63 பேரும், லெதர் பிரிவில் 5 பேரும், பிரிண்டிங் பிரிவில் 6 பேரும் சேர்க்கை அனுமதி கடிதம் பெற்றனர்.


தமிழகம் முழுவதும் உள்ள 526 கல்லுாரிகளிலிருந்து இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 97,836. இதில் சிவில் - 14,677, மெக்கானிகல் 22,400, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் 59,326, கெமிக்கல் 1,176, டெக்ஸ்டைல் 245, லெதர் 6, பிரிண்டிங் 6.


சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் வரும் 13-ம் தேதிக்குள் கவுன்சிலிங்கில் தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களுடன் சென்று சேர அறிவுறுத்தப்பட்டது.

ஏற்பாடுகளை முதல்வர் ராஜகுமார், துணை முதல்வர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்.-----


இறங்கு முகத்தில் சேர்க்கை: கடந்த 2015--16-ம் கல்வி ஆண்டில் சிவில் பிரிவுக்கு 14 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 3580 பேரும், மெக்கானிகல் பிரிவுக்கு 23 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும், எலக்ட்ரிகல் பிரிவுக்கு 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும் கல்லுாரிகளில் சேர்ந்தனர். மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 95 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 85 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 16,799 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு12,782 பேர் என, 4 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் மாணவர்கள் சேருவது குறைந்து வருகிறது.------

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement