Ad Code

Responsive Advertisement

வகுப்பறைக்குள் புகுந்த நாய்: 3 பேர் காயம்

வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய் மாணவர்களை கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்திருந்தனர். பள்ளியில் துப்புரவு பணியாற்றும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணிக்கு குடிநீர் தொட்டியில் கிருமிநாசினி மருந்து தெளிக்க வந்தார்.


அவரை தெருநாய் ஒன்று துரத்தி வந்தது. அவர் பள்ளி வளாகத்திற்குள் சென்ற போதும், நாய் அவரை விடவில்லை. பின்னால், துரத்தி வந்த நாய் மீது அந்த பெண் கல்லால் அடித்தார். இதில், பயந்து ஓடிய நாய் அருகில் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்தது. பயந்து நடுங்கியபடி கூச்சலிட்ட மாணவர்களை அந்த நாய் கடித்து குதறியது. இதில், மூன்றாம் வகுப்பு படிக்கும் காவாகுளத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் அஸ்வின்,7, ராமச்சந்திரன் மகன் வினோத்குமார்,7, முருகானந்தம் மகள் ஷர்மிதா,8, ஆகியோர் காயம் அடைந்தனர். கை, தலை, தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement