Ad Code

Responsive Advertisement

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெ., உத்தரவு.

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கடந்த, 2012ல் இருந்து, நான்கு ஆண்டு காலத்திற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், அரசு பணியாளர்களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூன், 30ம் தேதி முடிவடைந்தது.

எனவே, ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு, அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையை பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்தப்புள்ளி கள் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் குழு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்துஉள்ளது.அரசு பணியாளர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள, காப்பீட்டு திட்டத்தை விட, புதிய காப்பீட்டு திட்டம், சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது.

அவை:

* நான்கு ஆண்டுகளுக்கு அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட, குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதி, 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
* அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம், 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள், வயது வரம்புமின்றி, இத்திட்டத்தில் பயன்பெறலாம்
* இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, விபத்து காரணமாக, அவசர சிகிச்சையாக, அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டாலும், பணியாளர் பயன்பெற முடியும்
* அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர், நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீட்டு பலன்களை பெற முடியும்
* அரசு பணியாளர்கள் சந்தா தொகையாக, மாதம், 180 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தன் பங்காக, 17.90 கோடி ரூபாயை ஆண்டுதோறும், காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்
* இத்திட்டம் மூலம், 10.22 லட்சம் அரசு பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement