Ad Code

Responsive Advertisement

பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி

அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.


அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.


இந்நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதன் முடிவில் மொத்தம், 89,760 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் அதிகபட்சமாக மெக்கானிக்கல் படிப்பு, 21,137 பேர்; இ.சி.இ., எனப்படும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, 16,413; கம்ப்யூட்டர் சயின்ஸ், 15,387; எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், 10,136; சிவில், 10,088 பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர, ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


மெக்கானிக்கல் தமிழ் வழி வகுப்பில், 200 பேரும், சிவில் தமிழ் வழியில், 195 பேரும் சேர்ந்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement