குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வட்டார சுகாதார புள்ளியியல் துறையில் உள்ள 172 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றுநடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12,000 பேர் எழுதினர்.கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அம்மனியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெறும் குரூப் தேர்வுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் நம்பகத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அருள்மொழி கூறினார். ஜூன் மாதம் நடத்தப்பட்டகுரூப் ஒன் தேர்வு முடிவுகள் தாமதமாவதற்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பே காரணம் என்றும் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை