கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ளஅறிக்கை: கோவை மத்திய சிறையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேவையான கல்வி தகுதியுடன், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இதேபோன்று ஒரு சிறுதொழில் பயிற்றுநர் பணியிடம் காலியாகஉள்ளது. இதற்குகல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் ஓவியப்பயிற்சி சான்றிதழ் வேண்டும். ஆறு மாதம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இப்பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள், உரிய கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றுடன், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு, மத்திய சிறை எஸ்.பி., முன் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை