Ad Code

Responsive Advertisement

பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு

அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், 690 பி.எட்., கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை, இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.



கடந்த, 2015 வரை, ஓராண்டு படிப்பாக பி.எட்., இருந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, தற்போது, இரண்டு ஆண்டு படிப்பாக உயர்த்தப்பட்டது. இதற்கு, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாண்டு பி.எட்., படிப்பு அமலுக்கு வந்தது.இந்நிலையில், இரண்டாம் ஆண்டு பி.எட்., படிப்பை அமல்படுத்த, பல கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு நடத்த, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை, 1ம் தேதி முதல், 690 கல்லூரிகளிலும், இந்த சோதனையை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.இந்த தகவலை, அனைத்து கல்லூரிகளுக்கும், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை கடிதமாக அனுப்பியுள்ளது. எனவே, பி.எட்., கல்லூரிகள் கிலியில் உள்ளன. சரியான இடவசதிஇல்லாத சில, 'டுபாக்கூர்' தனியார் கல்லூரிகளில், அவசர அவசரமாக வகுப்பறைகளை இரண்டாக பிரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement