அரசு கல்லூரிகள், பல்கலைகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கு, ஜூலை, 4ம் தேதி முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, தனியார் இன்ஜி., கல்லுாரிகள் போன்றவற்றில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது. கோவை தொழில்நுட்ப கல்லூரியின்,www.gct.ac.in/www.tn-mbamca.comஇணையதளம் வழியே, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 4ம் தேதி முதல், 15ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், உரிய ஆவண நகல்களுடன், கோவை தொழில்நுட்ப கல்லுாரிக்கு, தங்கள் விண்ணப்ப பிரதியை, தபாலில் அனுப்ப வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை