Ad Code

Responsive Advertisement

தொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி. இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த, மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார். அவருக்கு சென்னை, கே.கே.நகரில் உள்ள, இ.எஸ்.ஐ.,

மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பதற்கு இடம் கிடைத்தது. அவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். குடும்பம் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதால், மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, மாணவி பிரியதர்ஷினி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


அதைத் தொடர்ந்து, அந்த மாணவியின் மருத்துவப் படிப்புக்கான, முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான, கல்லூரி கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றுக்கான, 1.10 லட்சம் ரூபாயை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments

  1. Thanks amma ungal pani thodara vallthugal

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement