தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
இவற்றுக்கு, மொத்தம், 26 ஆயிரத்து, 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றை இறுதிசெய்யும் பணி நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது. 17ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 20ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்க உள்ளது.
சமவாய்ப்பு எண்: பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. மாணவர்கள், ஒரே, 'கட் - ஆப்' பெற்றிருந்தால், பிறந்த தேதியை வைத்து, முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதி, 'கட் - ஆப்' என, இரண்டும் ஒரே மாதிரி இருந்தால், சிக்கலாகும். இதைத் தவிர்க்க, சம வாய்ப்பு எண் எனப்படும், 'ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை