அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.
இதனால் பலர் கல்வித்திறனில் பின்தங்கியுள்ளனர். அவர்கள் 9, 10 வகுப்புகளில் தோல்வி அடைகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பில் சிறப்பு தேர்வு நடத்தி, கல்வித்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.
அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் காலை, மாலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன.அதே போல் டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை