Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு.

தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வுக்கு, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுதேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வுகள், வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 16 வரை நடக்கிறது.


முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு டிப்ளமோ தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான, மே 14க்குள் விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது. தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில், பெயர் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement