Ad Code

Responsive Advertisement

சட்ட படிப்புக்கு இன்று விண்ணப்பம்

அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன. அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில்,சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு மற்றும் வேலுாரில், ஏழு அரசுசட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன.


இவற்றில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.


இந்த கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட பல்கலையிலும், நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு, ஜூலை 15க்குள் வழங்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement