Ad Code

Responsive Advertisement

கல்வித்தரத்தை அறிவதில் குழப்பம்:அடைவுத் தேர்வு முறையில் மாற்றம்

மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது. அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 


இதற்காக ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 3, 5, 8 ம் வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் 3, 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களிலும், 8 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட்டன.



இதில் பெரும்பாலும் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து எழுத வைத்தனர். இதனால் உண்மையான கல்வித் தரத்தை அறிந்து கொள்வதில் குழப்பம் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் அடைவுத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்துள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.



மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் என, அனைத்து பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தை அறிய திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement