Ad Code

Responsive Advertisement

சான்றிதழ் சோதனையால்ஊதிய உயர்வுக்கு சிக்கல்

ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது. அரசு பள்ளிகளில், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலையும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை அந்தஸ்தும் வழங்கப்படும். இந்த அந்தஸ்து பெறும் ஆசிரியர்களுக்கு, இரட்டை ஊதிய உயர்வு கிடைக்கும்.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும், இந்த தேர்வுநிலை அந்தஸ்து பெறும் ஆசிரியர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் உத்தரவு வழங்கப்படுகிறது.



இதற்கு, ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வேண்டுமென, பல இடங்களில் தேர்வுநிலை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்ட சான்றிதழ் உண்மைத் தன்மை விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கும் வரை, ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement