பள்ளி மாணவர்கள், தேவையான பாடப் புத்தகங்களை, பாடநுால் கழக இணையதளத்தில்பதிவு செய்து, பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்திற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகின்றன.
தனியாக புத்தகம் வாங்க விரும்பும் மாணவர்கள், பாடநுால் கழகத்தின் இணையதளமான, https:/textbookcorp.in/ மூலம் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைபயன்படுத்தும் மாணவர்கள், முதற்கட்டமாக தங்கள் பெயர், பள்ளி, மொபைல் போன் எண், வீட்டுமுகவரி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம்.தாலுகா அலுவலகங்களில் இயங்கும், அரசு இ - சேவை மையங்கள் மூலமும், புத்தகங்களை பதிவு செய்தால், கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை