பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு,சான்றிதழில் பிழை திருத்த, கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழின் படி, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது எழுத்து பிழை, எண் பிழை இருந்தால், அதை சரி செய்ய, இறுதி கட்ட வாய்ப்பு,பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும், தற்காலிக மதிப்பெண்சான்றிதழையும் சரிபார்த்து, அதில் பிழைகள் இருந்தால், அதை உடனடியாக தேர்வுத் துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஜூன், 13க்கு பின், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட உள்ளதால், அதற்கு மேல் மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை