இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11 லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பஸ் பாஸ் தயாரிக்கும் பணி இன்னும் துவங்காததால், பழைய பஸ் பாசை மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கள் எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பங்களை பெற்று, அதில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தரும் பணியை, பள்ளி நிர்வாகங்கள் துவக்கி உள்ளன.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், பஸ் பாஸ் தயாரிக்கப்படும். பாஸ் தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய, சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., 'டெண்டர்' கோரிஉள்ளது.அரசு விரைவு கழகத்தை தவிர்த்து, மற்ற, ஏழு போக்குவரத்து கழகங்களுக்கும், 31.11 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு போல் தாமதம் ஆகாமல், ஓரிரு மாதங்களுக்குள் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை