Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது. புதிதாக நிரந்தர பதிவு எண் அச்சிடப்பட்டு உள்ளது.

இந்த எண், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம் பெறும். அதேபோல், சான்றிதழ்களில், இரண்டு வகை பார் கோடுகள் இடம் பெற்றுள்ளன.


இதுதவிர, மாற்றுத்திறனாளிகள், சிறப்பு மாணவர்களுக்கு, பொதுப்பிரிவு மாணவர்கள் போல் அல்லாமல், பச்சை நிற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.


இந்த சான்றிதழ்களில், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட சலுகைகளும், அதற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement