Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அசல் சான்றிதழ் பெறும் மாணவர்கள், தங்களின் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இணையம் மூலமும் பதியலாம்: மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி வரை, வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது.

பதிவு பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்புத் தேதியாக அளிக்கப்பட உள்ளது. அதேபோல், ட்ற்ற்ல்ள்:ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசல் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் அந்தச் சான்றிதழைக் கொண்டு வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement