Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்

பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியாயின. இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தங்கள் விடைத்தாளை ஆய்வு செய்வதற்காக, விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று முதல், scan.tndge.in என்ற இணையதள முகவரியில், விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த நகல்களை பார்த்து, அதில் விடைகளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை மாணவர்கள் ஆய்வு செய்யலாம். விடைத்தாளில் மதிப்பெண்களை கூட்டி, மொத்தமாக பதிவு செய்ததில் தவறுகள் இருந்தால், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்காமலோ, குறைத்து வழங்கியிருந்தாலோ மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், scan.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 


பின் அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்குள், தங்கள் பகுதி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தையும், முதன்மைக் கல்வி அலுவலகத்திலேயே செலுத்தலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement