Ad Code

Responsive Advertisement

கால்நடை மருத்துவ படிப்பு : 16,653 விண்ணப்பங்கள் ஏற்பு

தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, 16,653 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. இதற்கான மாணவர் கவுன்சிலிங், ஜூலை இரண்டாவது வாரம் நடக்கிறது. இதுகுறித்து, பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: 


நான்கு இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, 18,302 பேர், 'ஆன் லைனில்' மனு செய்திருந்தனர். அவர்களில், 16,653 பேர், விண்ணப்பங்களை முறையாக பதிவிறக்கம் செய்து, நேரில் சமர்ப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக, கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பில் சேர, 13,432 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர். அந்தந்த பிரிவுகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், விரைவில் நிர்ணயிக்கப்படும். தகுதி உள்ள மாணவர்களுக்கு, ஜூலை இரண்டாவது வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement