ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:
அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும்இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். நாளை, வேலைநிறுத்த, 'நோட்டீஸ்' வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓடுவதில் சிக்கல்: இதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் அங்கீகரிக்கப்படாத, 110 சங்கங்களும் பங்கேற்கின்றன. ரயில் ஓட்டுனர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், 12 ஆயிரம்பயணிகள் ரயில்கள்; 7,000 சரக்கு ரயில்கள் சேவையில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை