Ad Code

Responsive Advertisement

10 மாவட்டங்களில் 220 அரசு பள்ளிகளில் ஸ்டெம் பயிற்சி திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பில் கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்காகவும், மாணவர்களை புத்தாக்க சிந்தனைகளுடன் மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் `ஸ்டெம்’ பயிற்சி திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் முதன்முறையாக தொடங்கப்பட உள்ளது. 



இவை முதற்கட்டமாக கோவை, தருமபுரி, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாலை ஆகிய 10 மாவட்டங்களில் தலா 22 பள்ளிகள் என மொத்தம் 220 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறை பயிற்சிகளாக நிபுணர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்முறை பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 3ம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல்திட்டங்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டன. பின்னர் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டு முதல் 220 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களை புத்தாக்க சிந்தனைகளுடன் மாறுபட்டு சிந்திக்க தூண்டும் வகையிலும், ஸ்டெம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

எளிமையான செய்முறை பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர் மாணவர்களே இந்த செய்முறை பயிற்சிகளை தானாகவே செய்வார்கள். கடினமான அறிவியல் பாடங்கள் கூட எளிதில் புரியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement