Ad Code

Responsive Advertisement

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.

தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,  அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளி களில், ஏப்., 1 முதல் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடந்து வருகின்றன. பாடத்திட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கூடுதல் புத்தகங்களும்வாங்க, மாணவர்களை பல பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன.

இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சுற்றறிக்கை விவரம்:அனைத்து பள்ளிகளிலும் புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடத்திட்டப்படி மட்டுமே புத்தகங்களை கொண்டு வர,மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பாடத்திட்டத்திற்கு தேவையில்லாத விளக்க புத்தகங்களை, பள்ளிகளுக்கு கொண்டு வர கட்டாயப்படுத்த வேண்டாம். 



இரண்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் புத்தகங்களை வகுப்பறையில் வைத்து இருந்து, பாட வேளைகளில் மட்டுமே கொடுக்க வேண்டும். வகுப்பறைகளில் நுாலகம் வைத்து, மாணவருக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அவர்கள் வீட்டில் இருந்து வரும் போது புத்தக சுமையை குறைக்க, பெற்றோருக்கு அறிவுறுத்துவதுடன், தொடர் மதிப்பீட்டு முறையை சரியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement