சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணி செய்ய உள்ள ஊழியர்களுக்கான, தபால் ஓட்டு அனுப்பும் பணி நேற்று(மே 4) துவங்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 3,770 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு, தேர்தல் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு அனுப்பி வைக்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சந்திரமோகன் நேற்று துவக்கி வைத்தார்.
மேலும், எந்தெந்த ஓட்டுச்சாவடியில், எந்தெந்த ஊழியர் பணி செய்ய உள்ளார் என, குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியும் நேற்று நடந்தது. இந்த நிகழ்வின் போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதற்கிடையே, சென்னை மாவட்டத்தில் உள்ள, 406 பதற்றமான ஓட்டு சாவடிகளில், மத்திய அரசு ஊழியர்கள், நுண் பார்வையார்களாக பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இதில், தேர்தல் விதிகள், ஓட்டு சாவடியில் நுண் பார்வையாளர்கள் பணிபுரிய வேண்டிய செயல்முறை குறித்துவிளக்கமளிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட நுண் பார்வையாளர்கள், இதில் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை