Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் ஆசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்... தடைபடாத வாக்குப் பதிவு!

உடுமலை அருகே, பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்தல் பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (54). இவர் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதி வடசின்னேரிபாளையம் பஞ்சாயத்து, காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்குப்பதிவு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். செல்வராஜ், தேர்தல் பணியில் இருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி கீழே சாய்ந்தவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துணைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

அங்கு செல்வராஜை மருத்துவர்கள் பரிசோதித்து முதலுதவி செய்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதை தொடர்ந்து செல்வராஜை அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

ஆனால், வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் கங்கேயம் அரசு மருத்துமனைக்கு செல்வராஜ் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்னறனர். செல்வராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, மாற்று அதிகாரி மூலம் தொடர்ந்து அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement