அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கிட பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த நான்காண்டுகளில் ரூ.64,485.97 கோடி ஒதுக்கீடு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்குக் கல்வி கற்க உதவும் அனைத்து உபகரணங்கள், சீருடைகள் போன்றவை வழங்கப்படுவதால் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை விகிதம் தொடக்கக் கல்வி நிலையில் 2014-2015இல் 99.85 சதவிகிதமாகவும், நடுநிலை நிலையில் 99.10 சதவிகிதமாகவும், இடைநிலையில் 91.17 சதவிகிதமாகவும், மேல்நிலையில் 75.87 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் இடைநிற்றல் தொடக்க நிலை வகுப்புகளில் 0.94 சதவிகிதமாகவும், நடுநிலை வகுப்புகளில் 1.58 சதவிகிதமாகவும், இடைநிலை வகுப்புகளில் 3.98 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
நான்காண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பயின்ற 21.56 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3,642.79 கோடி செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இடைநிலைக் கல்வியை இடைநிற்றலின்றித் தொடர சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,500/-, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.2,000/- கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் மேல்நிலைக் கல்வி முடிந்தவுடன் வழங்கும் வகையில் நான்காண்டுகளில் ரூ.1,429.09 கோடி ஊக்கத்தொகை பெற்று 88.59 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
2011-2012ஆம் ஆண்டு முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு இணைச் சீருடை, இரண்டு இணையாகவும், பின்னர் நான்கு இணையாகவும் உயர்த்தப்பட்டு, 2011-2012ஆம் கல்வியாண்டில் 46.88 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2012-2013ஆம் கல்வியாண்டில் 47.07 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2013-2014ஆம் கல்வியாண்டில் 53.54 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2014-2015ஆம் கல்வியாண்டில் 46.29 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும் நான்கு ஆண்டுகளில் ரூ.1,288.59 கோடி செலவில் இணைச் சீருடைகள் வழங்கப்பட்டன.
2013-2014 ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும் மலைவாழ் பகுதிகளில் உள்ள மதிய உணவு உட்கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கம்பளிச் சட்டைகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், 2013-2014ஆம் ஆண்டில் ரூ.4.12 கோடி செலவில் 1.03 இலட்சம் பேரும், 2014-2015ஆம் ஆண்டில் ரூ.3.71 கோடி செலவில் 1.03 இலட்சம் பேரும் பயனடைந்துள்ளனர்.
ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012இல் 69.25 இலட்சம் பேருக்கும், 2012-2013இல் 92 இலட்சம் பேருக்கும், 2013-2014இல் 97.70 இலட்சம் பேருக்கும், 2014-2015இல் 111.29 இலட்சம் பேருக்கும், நான்கு ஆண்டுகளில் ரூ.734.45 கோடி செலவில் வழங்கப்பட்டன.
2012-2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013இல் 81.02 இலட்சம் பேருக்கும், 2013-2014இல் 86.71 இலட்சம் பேருக்கும், 2014-2015இல் 77.66 இலட்சம் பேருக்கும், மூன்று ஆண்டுகளில் ரூ.320.10 கோடி செலவில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2012-2013ஆம் ஆண்டில் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப் பை வழங்கும் திட்டத்தில் 2012-2013இல் 92 இலட்சம் பேருக்கு ரூ.127.78 கோடி செலவிலும், 2013-2014இல் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 13 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.19.79 கோடி செலவிலும், 2014-2015இல் 90.78 இலட்சம் பேருக்கு ரூ.120.71 கோடி செலவிலும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 65.07 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் 2012-2013இல் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 46 இலட்சம் பேருக்கு ரூ.16.37 கோடி செலவிலும், 2013-2014இல் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 9.68 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.3.87 கோடி செலவிலும், 2014-2015இல் 9.39 இலட்சம் பேருக்கு ரூ.3.91 கோடி செலவிலும் கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கிரையான்ஸ்/வண்ணப் பென்சில்கள் வழங்கும் திட்டத்தில் 2012-2013இல் 31.45 இலட்சம் பேருக்கு ரூ.5.17 கோடி செலவிலும், 2013-2014இல் 32 இலட்சம் பேருக்கு ரூ.6.49 கோடி செலவிலும், 2014-2015இல் 31.45 இலட்சம் பேருக்கு ரூ.6.49 கோடி செலவிலும் கிரையான்ஸ் / வண்ணப் பென்சில்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நில வரைபடப் புத்தகம் வழங்கும் திட்டத்தில் 2012-2013இல் 46 இலட்சம் பேருக்கு ரூ.13.57 கோடி செலவிலும், 2013-2014இல் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 9.67 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.85 கோடி செலவிலும், 2014-2015இல் 9.39 இலட்சம் பேருக்கு ரூ.2.86 கோடி செலவிலும் நில வரைபடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா ஒரு இணை காலணிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013இல் 78.82 இலட்சம் பேருக்கு ரூ.104.15 கோடி செலவிலும், 2013-2014இல் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 6.10 இலட்சம் மாணவருக்கு ரூ.8.47 கோடி செலவிலும், 2014-2015இல் 77.66 இலட்சம் பேருக்கு ரூ.120.07 கோடி செலவிலும் ஒரு இணை காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.
11ஆம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2011-2012இல் 6.22 இலட்சம் பேருக்கு ரூ.179.21 கோடி செலவிலும், 2012-2013இல் 6.31 இலட்சம் மாணவருக்கு ரூ.194.20 கோடி செலவிலும், 2013-2014இல் 6.30 இலட்சம் பேருக்கு ரூ.200.98 கோடி செலவிலும், 2014-2015இல் 6.30 இலட்சம் பேருக்கு ரூ.216.04 கோடி செலவிலும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2011-2012இல் 46.88 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2012-2013இல் 48.63 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2013-2014இல் 53.40 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும், 2014-2015இல் 46.29 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்குமான இலவச பேருந்து பயணச்சலுகைத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 68.45 இலட்சம் பேரும் பயனடைந்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தாய், தந்தை இழந்த மாணவர்களின் பெயரில் ரூ.50,000 வீதம் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாகச் செலுத்தப்படும் திட்டத்தின் கீழ், 1,080 மாணவ, மாணவியர் பயன் பெற்றனர். 2014-2015ஆம் ஆண்டுமுதல் ரூ.50,000 என்பதை ரூ.75,000 ஆக உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 10ஆம் வகுப்பு முடித்த 28,35,558 மாணவ, மாணவியர்களுக்கு, 12ஆம் வகுப்பு முடித்த 20,10,043 மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்புப் பதிவு செய்து அதற்கான பதிவு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி, இருப்பிட மற்றும் வருவாய்ச் சான்றிதழ்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் சார்ந்த வட்டாட்சியரிடமிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 13,39,543 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்யும் கல்விசார் மேலாண்மைத் தகவல் முறைமைத் திட்டம் ரூ.99.47 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு 56,826 பள்ளிகள், 5,09,327 ஆசிரியர்கள் மற்றும் 1,33,65,140 மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் மனஅழுத்தத்தைக் குறைக்க 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.1.27 கோடி செலவில் அமைக்கப்பட்டு, இதுவரை 2,485 பள்ளிகளிலுள்ள 5,04,786 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
மாநில அளவில் பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு ரூ.1.17 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.22 இலட்சம் செலவில் போட்டி நடத்தப்பட்டது. 11,25,628 மாணவர்கள் பங்கேற்று 24 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
13 மாவட்டங்களில் உள்ள கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 44 மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.132.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்ட மதிப்பில் மாநில அரசின் 25 சதவிகித பங்களிப்பான ரூ.33.13 கோடிக்கும் கூடுதல் நிதியாக ரூ.57.23 கோடி ஒப்பளிப்பு செய்து 24,640 மாணவ, மாணவியர் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் ரூ.61.10 கோடி மதிப்பில் 44 மாணவியர் விடுதிகள் திட்ட மதிப்பீட்டில் மாநில அரசின் பங்களிப்பான ரூ.6.10 கோடிக்கும் கூடுதல் நிதியாக ரூ.45.44 கோடி ஒப்பளிப்பு செய்து 4,400 மாணவியர் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
45 தொடக்கப் பள்ளிகளில் பழைய கட்டடங்களுக்குப் பதிலாக புதியக் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.6.57 கோடியும், அரியலூரில் உள்ள மூன்று பள்ளிக் கட்டடங்களுக்கு ரூ.29 இலட்சமும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
055 12,619 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அப்பிரிவுகளில் 2.31 இலட்சம் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வருகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கு 72,843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 3,495 பணியிடங்கள் நிரப்பிட நடவடிக்கை. அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் அல்லாத 14,711 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க ரூ.20.18 கோடி அரசால் அனுமதிக்கப்பட்டு, 2,645 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களும், 3,300 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 51,447 என கண்டறியப்பட்டு அதில் 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
தொலைதூர மற்றும் மலைப்பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் 11,002 மாணவ, மாணவியர்களுக்கு கடந்த இரண்டாண்டுகளில் ரூ.6.36 கோடி செலவில் போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.70 கோடி செலவில் தொலைதூர, மலைப்பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் 4,520 குழந்தைகளுக்கு வழித்துணையாளர் வசதி அளிக்கப்பட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதிக்கு ரூ.2 கோடி செலவில் 9,186 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்..
நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டின்படி, பள்ளி நுழைவு நிலை வகுப்பில் 1,36,593 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கல்வி சார்ந்த பணிகளை மேம்படுத்த ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகத் தரம் உயர்வு.
பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் ரூ.2,688.97 கோடி செலவில் தலைமை ஆசிரியர் அறைகள், புதிய பள்ளிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, சமையற்கூடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை வசதி, சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளான மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம், மாற்றியமைக்கப்பட்ட கழிப்பறை வசதி ஆகியவை தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொலைதூர இடங்களிலுள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்தல் தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக “பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்” (Collaborative Learning through Connecting Class Room) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,800 மாணவ மாணவியர்கள் பயன்பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் 19.02.2014 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வி வசதி அளிப்பதற்காக ரூ.16.30 இலட்சத்தில் மாநில ஆதார வள மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 1,234 சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பயனடைந்துள்ளனர். 2013-2014ஆம் ஆண்டில் ரூ.10 இலட்சம் செலவினத்தில் மாநில ஆதார வள மையத்திற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நிர்மல் பாரத் அபியான், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி / ஊராட்சி ஒன்றிய நிதிகளின் கீழ் அரசுப் பள்ளிகளில் 34,796 கழிப்பறைகளும், 34,193 அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளின் பராமரிப்பதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6.54 கோடி வழங்கப்பட்டுள்ளது.
புவியியல் தகவல் முறைமையைப் பயன்படுத்தி பள்ளிகள் தேவைப்படும் என கண்டறியப்பட்ட குடியிருப்புகளில் 182 புதியத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்த்தப்பட்டன. 401 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு முதன்முறையாக பொதுத் தேர்வுத் தொடர்பான ஆவணங்களான பெயர்ப் பட்டியல், நுழைவுச் சீட்டு, வருகைச் சான்றிதழ் மற்றும் முகப்புத்தாள் (Top Sheet) போன்றவை தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடியதாகத் தயாரிக்கப்படுகிறது.
விடைத்தாள்களில் மாற்றெண்ணிடும் முறைக்குப் பதிலாக பட்டக் குறியீடு (Bar Code) முறை அறிமுகப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுக்குப் புகைப்படம் இருபரிமாணப்பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் இரகசியக் குறியீடுகளுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் முற்றிலும் தடுக்கப்படும்.
சிறப்புத் துணைத் தேர்வுக்கு மூன்று பாடங்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்பட்ட நிலையினை மாற்றி மார்ச் / ஏப்ரல் பருவத் தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களையும் ஜுன் / ஜூலை பருவ சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கு 2012ஆம் ஆண்டுமுதல் அனுமதி.
அரசு பள்ளிகள் / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பள்ளி செல்லாக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும், அதாவது, பள்ளிக்கு வெளியே மாற்று பள்ளிகளிலும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும், தேசியத் தொழிலாளர் நலத்திட்ட நலப் பள்ளிகளிலும், கஸ்தூரிபாய் காந்தி பாலீகா வித்யாலயாக்களிலும், சமூகநல பாதுகாப்புக்கான சிறார் பள்ளிகள், கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் இசைப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் வழங்க ஆணை.
மேனிலைத் தேர்வுகளுக்கு 40 பக்கங்களும் இடைநிலைத் தேர்வுகளுக்கு 32 பக்கங்களும் கொண்ட விடைப்புத்தகங்கள் அறிமுகம். மேலும், ரூ.1.48 கோடி செலவில் விடைப் புத்தகங்களுடன் மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முகப்புச் சீட்டுகள் தைக்கப்பட்டன.
வினாத் தாள் / விடைத் தாள்கள் காணாமல் போய்விடுவதும் சிதைவுறுவதுமான நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மார்ச், 2014 முதல் வினாத்தாள் / விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும் வாகன வசதிகள் ரூ.3.84 கோடி செலவில் செய்யப்பட்டன.
தேசியக் கல்வித்திட்டமிடல் மேலாண்மைப் பல்கலைக்கழகம் (NUEPA) புதுடில்லி வெளியிட்டுள்ள 2012-2013க்கான புள்ளி விவரங்களின்படி, தமிழகம் கல்வி முன்னேற்றக் குறியீட்டில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறிய யூனியன் பிரதேசங்களான இலட்சத்தீவுகள், புதுச்சேரி மட்டுமே தமிழகத்தைவிட முன்னிலையில் உள்ளன. பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களுக்குள் தமிழகம் முதலிடத்தை வகிக்கிறது என்பது பெருமைக்குரியதாகும்.
மாணவர்களின் கற்றல் அடைவு நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், மொழிப் பாடம் மற்றும் கணிதம் பாடத்திட்டத்தில் சராசரி அடைவு நிலையை விட அதிகம் பெற்று தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது.
குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிப்பதற்கான விதிகளை முதன் முதலாக அரசிதழில் வெளியிட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் – 4,340 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதி ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’ (Built, Own operate and Transfer BOOT Model) மாதிரியின் அடிப்படையில் ரூ.277.75 கோடி செலவில் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, எட்டரை, சோமரசம்பேட்டை மற்றும் இனாம்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுசார் வகுப்புகள் ஏற்படுத்த தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.1.25 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசுத் திட்டத்தின் கீழ், நாமக்கல், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அறிவுசார் பள்ளிகள் தொடங்க தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எழுத்தறிவு பெறாத வயது வந்தோருக்கு முதன்முறையாகக் கணினி வழியாக கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு 40 மையங்கள் “மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்கள்” ஆகத் தரம் உயர்வு. இத்திட்டம் அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.2.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள்.
ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சியில் ரூ.3 கோடி செலவில் ஆசிரியர் இல்லம் புதிதாகக் கட்ட ஆணை. தென் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த இல்லம் பயனுள்ளதாக அமையும்.
சென்னை சைதாப்பேட்டையில் தற்போது செயல்பட்டு வரும் 20 ஆண்டுகள் பழமையான ஆசிரியர் இல்லம் நவீன முறையில் புதுப்பிக்க ஆணை. சென்னைக்கு வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.3 கோடியில் கூடுதலாகப் புதிய கட்டடம்.
மாவட்ட நூலக அலுவலகங்களில் பணியாற்றும் 32 நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்கள் தங்களது பணியைச் செம்மையாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் செய்வதற்கு ஏதுவாக ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப்பிரிவு.
ஆசிரியர்களுக்குச் சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப் பலன்களை உரிய நேரத்தில் பெறுவதில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தைச் செயல்படுத்த ஆணை. மாணவ / மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாட்களில் பார்வையிடும் பொருட்டு அன்னையர் குழு அமைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமை இடமாகக் கொண்டு புதிதாகக் கல்வி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கென ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் (Module) முதற்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2012-2013இல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2013-2014 இல் 9 ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. முப்பருவ பாடத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் படைப்பாற்றல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.128 இலட்சம் செலவில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ரூ.10.03 கோடி செலவில் பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைதொடர்புத் தொழில்நுட்பம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 1,329 தொடக்கப் பள்ளிகளில் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
7,360 பள்ளிகளில் 20,805 கட்டடங்களில் ம ழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2011-2012ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 86 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி சதவிகிதம் 2013-2014ஆம் ஆண்டில் 4.7 சதவிகிதம் அதிகரித்து 90.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2011-2012ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 87 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி சதவிகிதம் 2013-2014ஆம் ஆண்டில் 3.60 சதவிகிதம் அதிகரித்து 90.60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2013-2014ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை அரசு (ம) நகராட்சிப் பள்ளி மாணவர்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
2014-2015ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 45.76 இலட்சம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகளும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63.18 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகளும், 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் 10 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகளும் ரூ.5.10 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன.
சாதி மத வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கிட பள்ளிக் கல்வித் துறை மற்றும் காவல் துறையின் மூலம் சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் 2014-2015ஆம் கல்வி ஆண்டில் ரூ.9.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகளை பராமரிப்பதற்காக ரூ.160.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 56.55 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.
2014-2015ஆம் கல்வி ஆண்டு முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.3 கோடி செலவில் முதன்முறையாக பள்ளி நாட்காட்டி (diary with calendar) வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, ரூ.31.66 கோடி செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், அதாவது Assistive Devices ஆகியவை வழங்கப்பட்டன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி ரூ.14 இலட்சம் செலவில் அளிக்கப்பட்டது.
கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள 9ஆம் வகுப்புப் பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32,563 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 இலட்சம் செலவில் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி வழங்க, ரூ.5.35 கோடி செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
1,140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 இலட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறைக்கென இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் ரூ.70 இலட்சம் செலவில் “நடமாடும் நூலகங்கள்” அமைக்கப்பட்டன.
அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள பொது நூலகத் தகவல் மேசை ரூ.26 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
வீட்டிற்கு ஒரு நூலகம் – தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ரூ.6 இலட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படுகிறன.
நூலகங்களில் இருப்பு நீக்கம் செய்யப்படும் பழமையான, அரிய நூல்களின் ஒரு பிரதியானது, நூல் ஆராய்ச்சியாளர் மற்றும் எதிர்காலச் சந்ததியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையில் ரூ.1.50 இலட்சம் செலவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் கட்டப்படும் “நூல்கள் பாதுகாப்பு மையத்தில்” பாதுகாக்கப்படுகிறது.
“வாசகர் வட்டம்” அமைப்புகளில், மாநில அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாகப் பங்காற்றும் 3 வாசகர் வட்டத் தலைவர்களுக்கு ரூ.15,000/- செலவில் “நூலக ஆர்வலர்” விருது வழங்கப்பட்டது.
மாவட்ட மைய நூலகக் குழந்தைகள் பிரிவில், புதிய உறுப்பினராகச் சேரும் முதல் 100 குழந்தைகளுக்கு, வரை உபகரணங்கள், வண்ணப் பென்சில்கள், களிமண் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய “விலையில்லா கற்றல் உபகரணப் பெட்டிகள்” ரூ.64 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள தொன்மை வாய்ந்த அரிய நூல்களை ரூ.7.50 இலட்சம் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, இலக்க முறையில் (Digital) பாதுகாக்கப்படுகிறது.
அரசு பள்ளிகள் அனைத்திலும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் 100 சதவிகிதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை