Ad Code

Responsive Advertisement

மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் வாழ தகுந்த கிரகங்கள் குறித்து பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவில் அப்பல்கலையின்விண்வெளித் துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறியதாவது:

உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சிறு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்துள்ளோம். நம் சூரிய குடும்பத்தை போலவே இதிலும் வேதியியல் படிமங்கள் நிறைந்துள்ளது.புதிதாக கண்டுபிடித்த இக் கிரகங்கள் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இவை அளவிலும் வெப்ப நிலையிலும் பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளது. பலகட்ட ஆய்வுக்குப் பின் இந்த 3 கிரகங்களும் மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் என முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு ஆகும். ஒளி ஓராண்டில் 6 லட்சம் கோடி கி.மீ., பயணம் செய்யும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement