உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.
ஆனால், இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. அதேபோன்று, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உடனடியாக வெளியிட வேண்டும்: இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், "உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகிறது. அனைத்து விண்ணப்பங்களிலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அன்று முதல் சில நாள்கள் வரை ஆன்லைன் மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்றனர்.
ஆசிரியர்களும் கோரிக்கை: தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:-
தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாவதால் ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள் வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. பொதுவாக அரசுத் தேர்வு முடிவுகள் வெளியானால் ஒரு வாரம் வரை சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் நாங்கள் விடுப்பு எடுக்க முடியாது.மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் வெளியூர் பயணங்களைத் திட்டமிட முடியாமல் தவித்து வருகின்றனர் எனவே பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை