Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 2013 -2104 ம் ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 199 பள்ளிகளை சேர்ந்த 10,812 மாணவர்கள் ,13,195 மாணவிகள் என,24,007 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985 ல் விருதுநகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் மாநில முதலிடம் பிடித்து வந்தது. 2013 -2104 ம் ஆண்டில் முதலிடத்தை கோட்டை விட்டு மூன்றாம் இடத்தை பிடித்தது. கடந்த 30 ஆண்டுகளில் 29 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் இந்தண்டும் முதலிடம் பிடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.



30 வது ஆண்டாக முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 95.73 தேர்ச்சி சதவீதம் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தை தக்க வைக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தி கையேடும் வழங்கினர். ஆனாலும் உரிய பலன் கிடைக்காதது, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது



மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி கூறுகையில்,“ கடந்தாண்டை விட இந்தாண்டு 1.73 சதவீதம் குறைந்துவிட்டது. ஒரு பள்ளியில் 4 மாணவர்களே பிளஸ் 2 தேர்வை எழுதினர் .இதில் ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்று , 3 மாணவர்கள் தோல்வியடைந்தது, தேர்ச்சி சதவீதத்தில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்தாண்டு முன் கூட்டியே குறைபாடுகளை கண்டறிந்து, அடுத்தாண்டு மீண்டும் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கப்படும்,”என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement