Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்கள் வரவேற்பு.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்சி., மெட்ரிக் போன்ற தனியார் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம், பள்ளி கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என தனித்தனியாக வசூலிக்கின்றனர்.

இதனால் அரசு பள்ளியில் உள்ள ஆங்கிலவழி கல்விக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.அதிக கட்டணம்  பிரி–கேஜி வகுப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. வகுப்புகள் அதிகரிக்கும் போது கட்டணமும் ரூ.10 ஆயிரம் அதிகரித்து விடுகிறது.இதனால் நடுத்தர குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. 


கூடுதல் வகுப்புகளுக்காக தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பள்ளிக்கும், பயிற்சியாளருக்கும் என கட்டணங்களை தனித்தனியாக வசூலிக்கின்றனர். மேலும் பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சி, விழா, சுற்றுலா, அறிவியல் கண்காட்சி, போட்டிகள் நடந்தால் அதற்கு அதிக கட்டணம் என வசூல் மழையில் தனியார் பள்ளி நிறுவனம் இயங்குகிறது.அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியதற்கு ரசீதுகள் எதுவும் தரப்படவில்லை. வசதிபடைத்தவர்கள் பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர். அவர்கள் தாங்கள் அலுவலகத்திலிருந்து வரும் வரை குழந்தைகளை பள்ளியிலேயே பராமரிப்பதற்கு தனியாக கட்டணம் செலுத்துகின்றனர். 



ஆனால் நடுத்தர மக்களால் தனியார் பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.பெற்றோர்கள் வரவேற்பு அதிமாகி வருவதால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை ஆங்கிலவழி கல்வி உள்ளது. தனியார் இண்டர்நேசனல், சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகள் அதிகம் உள்ளன. தனியார் பள்ளிகளை தாண்டி அரசுப்பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி கல்வி முறைக்கு அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.



இதற்கு காரணம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூட வசூலிப்பது இல்லை. மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகியவை வழங்கப்படுகிறது. இது அனைத்து தர மக்களிடமும்வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement