ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று 2013-ம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது. பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்தியமருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.இதனிடையே இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சில் முன் வைத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனாலும், பிற அமைச்சகங்களின் ஆலோசனைகளுக்குப் பின் இதில் இறுதி முடிவு எடுக்கப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்து இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.இந்த சீராய்வு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கான இடைக்கால தடையை ரத்து செய்து, பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை