Ad Code

Responsive Advertisement

துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு.

துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.


துவக்க,நடுநிலை பள்ளிகளுக்கு தேர்வு தேதி குறித்து கேள்வி எழுந்தது. துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு, 22ம் தேதி தேர்வு துவங்குகிறது. 23ம் தேதி தேர்வு இல்லை என்றாலும் பள்ளி நடைபெறும்.24ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, 25ம் தேதி முதல்28ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. 29,30 தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். உடற்கல்வி, ஓவியம் வரைதல் உள்ளிட்டவை நடைபெறும்.220நாட்கள் பள்ளி நடைபெற வேண்டும் என்பது விதிமுறை. அதற்காக தேர்வுக்கு பின்னரும் இரு தினங்கள் பள்ளிகள் செயல்பட உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement