Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று முடிந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மட்டும், இன்று விருப்பமொழி பாடத்தேர்வுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.ஏப்., 16 முதல், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல மாவட்டங்களில், மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் துவங்கி உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் பள்ளிகளில் இடங்களை வாடகைக்கு எடுத்து, விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.


தமிழ், கணிதம், வேதியியல் தேர்வு வினாத்தாள்களில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்பகுதி மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணித தேர்வு கொஞ்சம்கடினமாக இருந்ததால், 'சென்டம்' எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், சமூக அறிவியலில் ஏராளமானோர், 'சென்டம்' எடுக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement