Ad Code

Responsive Advertisement

TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பத்தாம் வகுப்புகள் போதிக்க ஒதுக்கீடு செய்வதில் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்.

TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிர் வரும் கல்விஆண்டிற்கான பத்தாம் வகுப்புகளை ஒதுக்கீடு செய்ய தலைமை ஆசிரியர்களிடையேகுழப்பம்.23/08/2010 க்குப் பிறகு தமிழக அரசின் முழுமையான ஒப்புதல் பெற்றுஅரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரியும் சுமார் 3300ஆசிரியர்கள் எதிர் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் TNTET ல் தேர்ச்சிபெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற அரசாணை தற்போது உள்ளது.

இந்த அரசாணையினால் கடந்த 5 வருடங்களாக ஊதியம், ஊக்க ஊதியம், வளரூதியம், தகுதிகாண் பருவம், விடுப்புகள் போன்ற பல பிரட்சனைகளை மன உளைச்சலுடன் சந்தித்துவரும் இவ்வகையான சுமார் 3300 ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்குபோதித்து முழு தேர்ச்சியும் காட்டி வருகின்றனர்.TET நிபந்தனைகளுடன் பணி புரியும் இந்த வகை ஆசிரியர்கள் தமிழக அரசின்பார்வைக்கு TETலிருந்து முழுவதும் விலக்கு கேட்டு பல வழிகளில் அற வழியில்கொண்டு சென்றும் முடிவுகள் வராமல் இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.கடந்த 2½  வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில்  TET நடத்தப்படவும் இல்லை.



ஆனால் தகுதியை 23/08/2010 க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தம்மாணாக்கர்கள் தேர்ச்சி சதவீதம் மூலம் நிரூபிக்காமலும் இல்லை.தற்போது எதிர் வரும் கல்வி ஆண்டில் (2016-17) பத்தாம் வகுப்பு போதிக்க இவ்வகைஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.



காரணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் எதிர் வரும் 2016நவம்பரில் இவ்வகையான ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாமல் போனால் பத்தாம்வகுப்பு மாணாக்கர்கள் (2016-17 ஆம் கல்வி ஆண்டின்) இடையே மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆகவே இது சம்மந்தமான தெளிவான முடிவை கல்வி அதிகாரிகள் விரைந்து எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.



மேலும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் இந்த 3300 பணியில் உள்ளபட்டதாரி ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement