மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மாணவர் சேர்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கொண்டு வரும் முடிவை ரத்து செய்ய மத்திய சுகாதார துறைக்கு உத்தரவிட வேண்டும்.
கிராமப்புற ஏழை மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே அது உதவிகரமாக போய்விடும்.
இது தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மறுசீராய்வு மனுவை திரும்ப பெற வேண்டும். இந்த மனு மீதான விசாரணை இம்மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி திறன் மற்றும் நுழைவுத் தேர்வை நுழைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு எதிர்ப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மறுஆய்வு மனுவுக்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னதாக ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை அவர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை